ADDED : செப் 17, 2024 04:25 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது.
ரோட்டரி சங்கத் தலைவர் ஜார்ஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி முன்னிலை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் வரவேற்றார். மரக்கன்றுநடுதல், துணிப்பை வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களிடம் சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் தீங்கு, சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கினர். ரோட்டரி சங்க பொருளாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.
