/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2 ஆண்டுக்கு பின் பாம்பன் துாக்கு பாலத்தில் வர்ணம்
/
2 ஆண்டுக்கு பின் பாம்பன் துாக்கு பாலத்தில் வர்ணம்
ADDED : மார் 02, 2025 06:42 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
பாம்பன் கடலில் உள்ள ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் 2022 டிச., 23ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து 530 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் பழைய ரயில் துாக்கு பாலத்தை மக்கள் பார்வைக்காக வைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக 2 ஆண்டுகளுக்கு பின் கடந்த சில நாட்களாக துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு துருவை ரயில்வே ஊழியர்கள் அகற்றி உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வர்ணம் பூசினர். இதனை தொடர்ந்து நேற்று ரசாயனம் கலந்த அலுமினிய வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.