ADDED : ஆக 25, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி: கமுதி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் விபத்தை தடுக்கும் நடவடிக்கையாக பாலங்களுக்கு வெள்ளை அடித்தல் மற்றும் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. விபத்து அடிக்கடி நிகழக்கூடிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சாயல்குடியில் இருந்து கமுதி செல்லும் தோப்படைப்பட்டி சாலையில் பணிகள் நடந்தன.
கமுதி தேசிய நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட உதவி பொறியாளர் பார்த்திபன் மற்றும் சாலை பணியாளர்கள் பணிகளை செய்தனர்.

