/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் பனையோலை கலைநய உற்பத்தி பயிற்சி வகுப்புகள்
/
திருப்புல்லாணியில் பனையோலை கலைநய உற்பத்தி பயிற்சி வகுப்புகள்
திருப்புல்லாணியில் பனையோலை கலைநய உற்பத்தி பயிற்சி வகுப்புகள்
திருப்புல்லாணியில் பனையோலை கலைநய உற்பத்தி பயிற்சி வகுப்புகள்
ADDED : ஏப் 04, 2024 11:31 PM

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புதியதாக கற்றுக் கொள்ளும் வகையில் பனை ஓலையில் கலைநயபபொருட்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
பயிற்சியின் துவக்க விழாவிற்கு வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் செயலர் அருள் தலைமை வகித்தார். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஆசைத்தம்பி வரவேற்றார்.
பனை மரத்தின் குறுத்தோலை பகுதிகளிலிருந்து கலைநயமிக்க கிளுகிளுப்பை, விசிறி, இடியாப்ப பெட்டி, பூக்கூடை, தட்டு உள்ளிட்ட பல வகையான உற்பத்தி பொருட்கள் செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சி.எம்.எஸ்.,பவுண்டேஷன் சார்பில் உரிய முறையில் சந்தைப்படுத்தப்பட்டு மகளிர் சுய உதவி குழு மற்றும் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நிரந்தர வருமான வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. வாப்ஸ் நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

