/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் 14 நாளில் 49 மீ., நகர்த்தப்பட்டது

ADDED : மார் 27, 2024 12:58 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 14 நாள்களில் புதிய ரயில் துாக்கு பாலத்தை 49 மீ., துாரத்திற்கு ரயில்வே பணியாளர்கள் நகர்த்தி உள்ளனர்.
பாம்பன் கடலில் ரூ.535 கோடியில் 2 கி.மீ.,க்கு புதிய ரயில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. 2 ஆண்டுகளாக நடக்கும் இப்பணியில் 1.5 கி.மீ.,க்கு 100 சதவீதம் பாலம் பணி முடிந்தது. மீதமுள்ள 500 மீ.,ல் துாண்கள் அமைத்து அதன் மீது இரும்பு கர்டர், தண்டவாளம் பொருத்தாமல் உள்ளனர்.
இதற்கு காரணம் பாம்பன் பாலத்தில் கிழக்கு நுழைவு கடற்கரையில் புதிய துாக்கு பாலம் வடிவமைத்தனர். இந்த புதிய துாக்கு பாலம் வடிவமைப்பு 100 சதவீதம் நிறைவடைந்ததும் மார்ச் 12ல் 'ஹைட்ராலிக் லேண்டிங் கர்டர்' என்ற இயந்திரத்தின் மூலம் துாக்கு பாலத்தை நகர்த்தினர்.
இதுவரை 14 நாள்களில் 49 மீ., துாரத்திற்கு ரயில்வே ஒப்பந்த பொறியாளர்கள் நகர்த்தி உள்ளனர். இந்த துாக்கு பாலத்தை நகர்த்திச் செல்லும் வழியில் வளைவு உள்ளதால் இதனை நடுவில் கொண்டு செல்ல இன்னும் 30 நாள்கள் நீடிக்கும் என தெரிவித்தனர்.