/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு தரம் குறித்து ஊராட்சி தலைவர் ஆய்வு
/
சத்துணவு தரம் குறித்து ஊராட்சி தலைவர் ஆய்வு
ADDED : ஜூலை 02, 2024 10:33 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளியில் கருங்காலக்குறிச்சி,தொட்டிவலசை, வெங்கலக்குறிச்சி கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் தினந்தோறும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து வெங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் ஆய்வு செய்தார். அப்போது பெற்றோர்களும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தனர். பின் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் ஆய்வு செய்தனர். உடன் தலைமையாசிரியர்கள் சேதுராமன், ஆலிஸ் உட்பட பெற்றோர் பங்கேற்றனர்.