/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகி பதவி நீக்கம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகி பதவி நீக்கம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகி பதவி நீக்கம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகி பதவி நீக்கம்
ADDED : ஜூலை 12, 2024 04:23 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் என். நாகேந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறியிருப்பதாவது:
சங்க அமைப்பிற்கு எதிராகவும், இயக்கத்திற்கு எதிரான அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ள காரணத்தால் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் என்.நாகேந்திரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
மேலும் 3 மாதங்களுக்கு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள மாவட்ட தலைவர் பதவிக்கான அதிகாரங்கள் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் தேனி ஏ.குமரேசனிடம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.