ADDED : ஜூலை 09, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி செயலர்கள் செயற்குழு கூட்டம் திருப்புல்லாணியில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திருப்புல்லாணி ஒன்றிய தலைவராக சேகு ஜலாலுதீன், ஒன்றிய செயலாளராக பழனி முருகன், ஒன்றிய பொருளாளராக மங்களசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.