/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் ஆக.27ல் ஒற்றை கோரிக்கை போராட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் ஆக.27ல் ஒற்றை கோரிக்கை போராட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் ஆக.27ல் ஒற்றை கோரிக்கை போராட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் ஆக.27ல் ஒற்றை கோரிக்கை போராட்டம்
ADDED : ஆக 22, 2024 02:31 AM

ராமநாதபுரம்:தமிழகத்தில் 12 ஆயிரத்து 664 ஊராட்சிகளில் செயலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு தற்செயல் விடுப்பு எடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக.27ல் சென்னை பனகல் மாளிகை ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது: தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் இதுவரை இணைக்கப்படவில்லை.
சிறப்பு கால முறை ஊதியம் பெற்ற போது வழக்கப்பட்ட ஓய்வூதிய தொகையான ரூ.2000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசிடம் பலமுறை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி செயலாளர் தற்செயல் விடுப்பு எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
ஆக.27ல் சென்னை யில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.