/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊராட்சி செயலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊராட்சி செயலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊராட்சி செயலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊராட்சி செயலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 02:29 AM

ராமநாதபுரம்: ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பொருளாளர் சிவசாமி, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கே.பாக்கியராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு 2018ல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் எட்டு ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் ரூ.2000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கண்டித்து தற்செயல் விடுப்பு எடுத்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.------