/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

ADDED : ஏப் 23, 2024 11:08 PM

சாயல்குடி- சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. கடந்தாண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு அம்மன் சன்னதி முன்புறமுள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு தர்ப்பை புற்கள் கட்டப்பட்டது. பின்னர் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
மூலவர் பத்திரகாளி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு முளைக்கொட்டு திண்ணையில் பெண்கள் குழந்தைகள் பங்கேற்கும் கும்மி பாட்டு, கோலாட்டம் உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது.
ஏப்.26ல் 608 விளக்கு பூஜையும், ஏப்.30 காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடனும், 10:00 மணிக்கு பூக்குழி இறங்குதலும், 11:00 மணிக்கு கும்ப அபிஷேகமும் நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.