/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பங்குனி பொங்கல் முகூர்த்தக்கால் நடும்விழா
/
பங்குனி பொங்கல் முகூர்த்தக்கால் நடும்விழா
ADDED : மார் 03, 2025 07:26 AM

கமுதி : -கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
இதனை முன்னிட்டு மூலவரான முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம் மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது. கோயில் முன்பு முகூர்த்தக்கால் நாள் நடப்பட்டது.
தினந்தோறும் முத்துமாரியம்மன் வெள்ளிக்குதிரை, காமதேனு, அன்னப்பறவை உள்ளிட்ட அலங்கார வாகனங்களில் நகர் வீதி உலா வரும். முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 2ல் கொடியேற்றம், 8ல் பொங்கல் விழா, 9ல் அக்கினி சட்டி, சேத்தாண்டி வேடம், 11ல் விளக்குபூஜை, 12ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.