/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
/
கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
ADDED : மார் 25, 2024 06:09 AM

கீழக்கரை, கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் 46வது ஆண்டு பங்குனி உத்திர விழா நடந்தது. மார்ச்.15ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை, மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் இருந்து உற்ஸவர்கள் செல்வ விநாயகர், வழிகாட்டி பாலமுருகன் வீதி உலா புறப்பாடு நடந்தது. பின்னர் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.
நேற்று காலை 8:00 மணிக்கு முத்துச்சாமிபுரம் ஆதி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், சேவல் காவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு மூலவருக்கு பங்குனி உத்தரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் மயில் காவடி, பறவை காவடிகள் புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

