/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரை ஒதுங்கிய படகு உடலுடன் வந்ததால் பீதி
/
கரை ஒதுங்கிய படகு உடலுடன் வந்ததால் பீதி
ADDED : செப் 16, 2024 01:37 AM
பொன்னகரம்: ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த மீனவர் பன்னீர்செல்வம் என்பவரது, 'பைபர் கிளாஸ்' மீன்பிடி படகு, கடற்கரையில் நிறுத்தி இருந்த போது காணாமல் போனது.
இதுகுறித்து, செப்., 11ல் ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனில் மீனவர் புகார் செய்தார். போலீசார் தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே பொன்னகரம் கடற்கரையில் அந்த படகு நேற்று கரை ஒதுங்கியது.
ஆனால் அந்த படகில் அடையாளம் தெரியாத, 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இருந்தது.
இதுகுறித்து, அப்பகுதி மரைன் போலீசார் கூறுகையில், 'ராமேஸ்வரத்தில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த இவர், படகை எடுத்துச் சென்றிருக்கலாம்.
அதன் இன்ஜினை இயக்க தெரியாததால் காற்றின் வேகத்தில் படகு சென்றிருக்க கூடும். இந்த நபர் எவ்வாறு இறந்தார் என விசாரிக்கப்படுகிறது' என்றனர்.
இதையடுத்து, படகை ராமேஸ்வரம் கொண்டு வர மீனவர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டம் சென்றுள்ளார்.

