/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தை பசுமை போர்த்தியமாவட்டமாக உருவாக்குவேன் பன்னீர்செல்வம் உறுதி
/
ராமநாதபுரத்தை பசுமை போர்த்தியமாவட்டமாக உருவாக்குவேன் பன்னீர்செல்வம் உறுதி
ராமநாதபுரத்தை பசுமை போர்த்தியமாவட்டமாக உருவாக்குவேன் பன்னீர்செல்வம் உறுதி
ராமநாதபுரத்தை பசுமை போர்த்தியமாவட்டமாக உருவாக்குவேன் பன்னீர்செல்வம் உறுதி
ADDED : மார் 30, 2024 04:50 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை போர்த்திய மாவட்டமாக உருவாக்குவேன் என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து தேசிய முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பன்னீர்செல்வம் பேசியதாவது:
நான் துரோகத்தால் வீழ்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட போது எனக்கு ஆதரவாக இருந்தவர் பிரதமர் மோடி. அதற்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ராமநாதபுரத்தில் பா.ஜ., நிர்வாகிகள் மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துள்ளனர்.
பா.ஜ., கட்சி நாடு முழுவதும் அனைத்து தொகுதியிலும் நிர்வாகத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் காசியில் போட்டியிடுகிறார். நான் ராமேஸ்வரம் பகுதியில் போட்டியிடுகிறேன். பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் எனது மூதாதையர்கள் இந்த தொகுதியான ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர்கள். எனவே நான் இந்த மண்ணை சேர்ந்தவன்.
ராமநாதபுரம் தொகுதி பின் தங்கிய தொகுதியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வைகை அணையில் தேக்கப்பட்டு பாசனத்திற்காக வழங்கப்படும் நீர் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்களை கடந்து கடலில் கலக்கிறது. இதனை வீணாக்காமல் பாசன திட்டங்களை மேம்படுத்துவேன்.
அடுத்ததாகதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர்கிறது. அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இந்த மாவட்டம் வறட்சியான மாவட்டம். 4 நாட்களில் இங்கு வெப்பத்தை அறிந்து கொண்டோம். சீமைக்கருவேல மரங்களை அகற்றி பசுமை போர்த்திய மரங்களை வளர்த்து மழை பெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மக்கள் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் நிலை உள்ளது.
இங்கு புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்குவேன். சுயேச்சையாக போட்டியிடும் எனக்கு முழு மனதோடு பணிபுரிந்து வெற்றி பெற்றுத்தர வேண்டும் என்றார்.
எம்.பி., க்கள் ரவீந்திராத், தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன். பா.ஜ., மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், பொறுப்பாளர்கள் கதிரவன், நாகேந்திரன், ரஞ்சனா நாச்சியார், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் திருமாறன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.-

