/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பலாப்பழத்திற்கு பதிலாக இரட்டை இலை வாக்காளர்களிடம் சமாளித்த பன்னீர்செல்வம்

ADDED : ஏப் 03, 2024 06:55 AM
பரமக்குடி: ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பாஜ., கூட்டணி சுயேச்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று போகலுார் ஒன்றியம் மஞ்சூரில் கொளுத்தும் வெயிலில் ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து பலாப்பழத்திற்கு ஓட்டு சேகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் உங்களது பொன்னான வாக்குகளை வெற்றி சின்னமாம் 'இரட்டை இலை' என்று கூறியவர் பலாப்பழம் சின்னத்திற்கு அளிக்க வேண்டும் என்றார். சுதாரித்துக் கொண்டவர் பெரியோர்களே.. தாய்மார்களே... இது பழக்க தோஷம், என்ன செய்றது. என சில விநாடிகள் பேச்சை நிறுத்திக் கொண்டார். (அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு மற்றும் சிரிப்பொலி எழுந்தது).
அதனைக் கைப்பற்றுவதற்காகத் தான் இன்றைக்கு தொண்டர்களின் உரிமை போராட்டமாக தர்மயுத்தம் துவக்கி இருக்கிறேன். இந்த இயக்கம் புரட்சி தலைவரால் தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கப்பட்டது. 26 ஆண்டுகள் தமிழகத்தில் நம்பிக்கையை பெற்று பொறுப்பில் இருந்துள்ளேன்.
இப்படிப்பட்ட இயக்கத்தை கைப்பற்றி நம்பிக்கை துரோகத்தால் இன்றைக்கு அந்த சின்னத்தை வெளியில் சொல்வதற்கு கூட தொண்டர்கள் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நம் வெற்றிச் சின்னமான பலாப்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.