/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பராமரிப்பு இல்லாமல் முடங்கிய பூங்கா: ரூ.40 லட்சம் வீண்

ADDED : ஆக 06, 2024 04:45 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் பராமரிப்பின்றி நகராட்சி பூங்கா முடங்கியதால் ரூ.40 லட்சம் வீணாகியது.
ராமேஸ்வரம் நகராட்சிக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக 2018ல் மத்திய அரசின் அம்ருத் சிட்டி திட்டத்தில் ரூ.2 கோடியில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கியது. அதன்படி ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் மற்றும் இதன் அருகிலும், சீதா தீர்த்தம், அக்னி தீர்த்தம் கடற்கரை அருகில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில் 2019ல் பஸ் ஸ்டாண்ட் அருகில் ரூ.40 லட்சத்தில் அமைத்த பூங்கா மக்கள் பயன்படுத்தாத முடியாத ஒதுக்குபுறத்தில் இருந்ததால் சில ஆண்டுகளாக மூடியே உள்ளது.
இந்நிலையில் 2021ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டாலும், பூங்கா பராமரிப்பின்றி கிடந்ததால் இரவில் குடிமகன்கள் மது அருந்தும் பாராக மாற்றினர்.
மேலும் இங்குள்ள குழந்தைகளின் விளையாட்டு சறுக்கு உபகரணங்கள், ஊஞ்சல்கள் உடைக்கப்பட்டுள்ளன.
மேலும் பூங்காவில் முள்செடிகள், புதர்கள் முளைத்து அலங்கோலமாய் கிடக்கிறது. இதனால் மத்திய அரசு நிதி ரூ.40 லட்சம் வீணாகியது.