/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய மல்யுத்த போட்டியில் பரமக்குடி மாணவர்கள் வெற்றி
/
தேசிய மல்யுத்த போட்டியில் பரமக்குடி மாணவர்கள் வெற்றி
தேசிய மல்யுத்த போட்டியில் பரமக்குடி மாணவர்கள் வெற்றி
தேசிய மல்யுத்த போட்டியில் பரமக்குடி மாணவர்கள் வெற்றி
ADDED : செப் 08, 2024 04:22 AM

பரமக்குடி: தேசிய மல்யுத்த போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
ஹரியானா மாநிலம் ரோதக் எம்.டி. யூனிவர்சிட்டியில் ஆக.30, 31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் 17 வது தேசிய அளவிலான கிராபிலிங் 2024 மல்யுத்த போட்டிகள்நடந்தது.
இதில் பரமக்குடி மாணவி கனிஷ்கா ஸ்ரீ 56 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் மற்றும் 52 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
கனிஷ்கா 52 கிலோ பிரிவில் இரண்டு வெள்ளி, 60 கிலோ பிரிவில் பிரபாகரன் வெண்கலம், 49 கிலோ பிரிவில் முகிலரசன் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளி வென்ற வீரர்கள் அடுத்த மாதம் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களை பயிற்சியாளர் கவி பிரகாஷ் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.