/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆற்றை எட்டிப் பார்த்த மழைநீர்
/
பரமக்குடி வைகை ஆற்றை எட்டிப் பார்த்த மழைநீர்
ADDED : ஆக 19, 2024 12:45 AM

பரமக்குடி : மதுரையில் இருந்து மழை நீர் வைகை ஆற்றில் பரமக்குடி நோக்கி வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் இருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், பார்த்திபனுார் மதகு அணை வழியாக பரமக்குடி, ராமநாதபுரம் வரை சென்றடையும்.
இதன்படி கடந்த டிச., 4000கன அடி வீதம் தண்ணீர் 7 நாட்கள் ஓடியது. மேலும் மே 10 ல் ராமநாதபுரம் குடிநீர் தேவைக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஓடியது.
தற்போது 2 நாட்களாக பார்த்திபனுார் மதகு அணைக்கு வந்த மழை நீர், வைகை ஆறு மற்றும் வலது, இடது பிரதான கால்வாய்களில் லேசாக நனைத்தபடி தண்ணீர் செல்கிறது.
மழை நீரால் தடுப்பணை மற்றும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் சேகரம் ஆவதால் ஓரளவிற்கு ஊற்று நீர் பெருகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

