/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி: பூப்பல்லக்கில் பவனி வந்த அழகர்
/
பரமக்குடி: பூப்பல்லக்கில் பவனி வந்த அழகர்
ADDED : ஏப் 30, 2024 10:38 PM

பரமக்குடி, - -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று அழகர் பூப்பல்லக்கில் பவனி வந்தார்.
இக்கோயிலில் ஏப்.18ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி சித்திரை திருவிழா நடந்தது. ஏப்.23 அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து குதிரை வாகனம், சேஷ, கருட வாகனம், ராஜாங்க திருக்கோலம் என அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அழகர் நின்ற திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டுடுத்தி ஈட்டி ஏந்தி பூ பல்லக்கில் அமர்ந்தார். பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து காலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா நாட்களில் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.