/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி குறு வட்டார குழு விளையாட்டு போட்டிகள்; லயன்ஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம்

ADDED : ஆக 01, 2024 11:12 PM

பரமக்குடி : பரமக்குடி குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குழு விளையாட்டில் முதலிடம் பெற்றனர்.
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் கைப்பந்து போட்டியில் 14 வயது மாணவிகள் மற்றும் மாணவர்கள், 17, 19 வயது மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்றனர். கூடைப்பந்து போட்டியில் 14 வயது மாணவிகள், 17 வயது மாணவர்கள் பிரிவில் முதலிடமும், 14 மற்றும் 17 வயது பிரிவு மாணவர், மாணவிகள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
மேலும் 14 வயது மாணவிகள் வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்றனர். தொடர்ந்து 17 வயது டேபிள் டென்னிஸ் மாணவர்கள் இரட்டையர் பிரிவு, 17 வயது மாணவர்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
இவர்களை பள்ளி சேர்மன் சவுந்தர நாகேஸ்வரன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தினகரன், முதல்வர் சோபனா தேவி, உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணகுமார், வளர்மதி, சஞ்சய் துரை மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.