/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு ஆண்ட்ராய்டு போன் வாங்க கூறுவதால் பெற்றோர் அதிர்ச்சி
/
எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு ஆண்ட்ராய்டு போன் வாங்க கூறுவதால் பெற்றோர் அதிர்ச்சி
எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு ஆண்ட்ராய்டு போன் வாங்க கூறுவதால் பெற்றோர் அதிர்ச்சி
எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு ஆண்ட்ராய்டு போன் வாங்க கூறுவதால் பெற்றோர் அதிர்ச்சி
ADDED : மே 27, 2024 12:41 AM
ராமநாதபுரம் : எமிஸ் தளத்தில் மாணவர்களின் விபரங்களுடன் அலைபேசி எண்ணை சரி பார்த்து பதிவு செய்ய ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்துவது பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எமிஸ் தளத்தில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் பெற்றோர்கள் அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்களை சரி பார்த்து பதிவேற்றம் செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 82 லட்சம் எண்கள் சரிபார்த்து 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளது.
இதில் அலைபேசி இல்லாத பெற்றோர்கள் உடனடியாக குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு அலைபேசி வாங்குங்கள் என பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களிடம் பட்டன் அலைபேசி இருப்பதே கடினம். அவர்களை ஆண்ட்ராய்டு அலைபேசி வாங்க சொல்வதாக புலம்புகின்றனர்.
அலைபேசி எண்ணை சரி பார்க்கும் போது அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் பொதுவாக 2 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த பாஸ்வேர்டை 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என தெரிவித்தனர். ஒரு நாள் பெறப்பட்ட பாஸ்வேர்டை அடுத்த நாள் பயன்படுத்தும் போது எமிஸ் தளத்தில் 'அப்டேட்' ஆவதில்லை. ஒன்டைம் பாஸ்வேர்ட் ஆன்ட்ராய்டு போனை தவிர மற்ற பட்டன் அலைபேசிகளில் குறுஞ்செய்தி வருவதில்லை. ஒன்டைம் பாஸ்வேர்டை வாங்குவது தெரிந்து பல மோசடி நபர்கள் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து கேட்பதாக கூறி மோசடியிலும் ஈடுபடுகின்றனர். சில பெற்றோர்கள் ஒன் டைம் பாஸ்வேர்டை சரியான புரிதலின்றி ஏன் கொடுக்க வேண்டும் என மறுக்கவும் செய்கின்றனர். இது போன்று பல்வேறு குழப்பங்கள் தொடர்கிறது.
இதற்கு பள்ளி திறந்த பின்பு சம்பந்தப்பட்ட மாணவர்களை பெற்றோர்களிடம் பேச வைத்து எளிதாக அலைபேசி எண்களை அப்டேட் செய்து விடலாம். அதற்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு என்ன அவசரம் என்பதுதெரியவில்லை என தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இந்த குழப்பத்திற்கு தீர்வுகாண பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

