/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பூங்கா மாயம் : ரூ.20 லட்சம் வீண்
/
ராமேஸ்வரத்தில் பூங்கா மாயம் : ரூ.20 லட்சம் வீண்
ADDED : ஆக 23, 2024 04:01 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் 6 ஆண்டுக்கு முன்பு அமைத்து பூங்கா சேதமடைந்து இருந்த இடம் தெரியாமல் போனதால், தற்போது கால்நடைகள் ஓய்வெடுக்கும் பகுதியாக மாறி உள்ளது. இதனால் மக்கள் வரி பணம் ரூ. 20 லட்சம் வீனாகிவிட்டது.
ராமேஸ்வரம் நகராட்சியில் சுற்றுலா மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியில ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனருகிலும், லட்சுமண தீர்த்தம் அருகிலும் பூங்கா, தகவல் பலகை அமைத்தனர். இதில் 2018ல் லட்சுமண தீர்த்தம் அருகில் ரூ. 20 லட்சம் செலவில் நடைபாதை, மக்கள் ஓய்வெடுக்க இருக்கைகள், அழகு செடிகளுடன் பூங்கா அமைத்தனர்.
ஆனால் இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அப்பகுதியில் உள்ள கால்நடைகள் புகுந்து அழகு செடிகள், விளையாட்டு உபகரணங்களை சிதைத்தது. தற்போது பூங்கா இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் காணாமல் போனதால், தற்போது கால்நடைகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறி உள்ளது. இதனால் மத்திய அரசின் நிதி ரூ. 20 லட்சம் வீணாகிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.