/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டிற்குள் பிற வாகனங்கள் நிறுத்த தடை
/
பஸ் ஸ்டாண்டிற்குள் பிற வாகனங்கள் நிறுத்த தடை
ADDED : ஏப் 26, 2024 12:45 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் ஆட்டோ, டூவீலர்களை நிறுத்த போலீசார் தடை விதித்து நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில்வெளியூர் பஸ்கள் நிறுத்த இடவசதி இல்லை. இந்த நிலையில் அத்துமீறி ஆட்டோ, டூவீலர்களை கண்டபடி நிறுத்துவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பஸ்களை நிறுத்தும் போதும், புறப்படும் போதும் தினமும் இடையூறு ஏற்படுகிறது.
இது தொடர்பாக (ஏப்.24ல்) தினமலர் நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி, போக்குவரத்து போலீசார் இணைந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர், ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது எனவும், இது தொடர்பாக 'நோ பார்க்கிங்' என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்டில் பயணிகள், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

