/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி
/
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி
ADDED : ஏப் 04, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியில் குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் பயணிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் மக்கள் மற்றும் பயணிகளின் தேவைக்கான குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரக்கூடிய பயணிகள் கடைகளில் தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்பொழுது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் உரிய இடங்களில் சுகாதாரமான முறையில் தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.