/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் குடிநீரின்றி பயணிகள் அவதி
/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் குடிநீரின்றி பயணிகள் அவதி
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் குடிநீரின்றி பயணிகள் அவதி
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் குடிநீரின்றி பயணிகள் அவதி
ADDED : மே 13, 2024 12:18 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கொளுத்தும் கோடை வெயிலில் தண்ணீர்இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் ரயில்நிலையம் வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து பல ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில்பயணிகள் குடிப்பதற்காக இரு இடங்களில் மட்டுமே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிகாரி அலுவலகம் அருகே இந்த பிளான்டுகள் அமைக்கப்பட்டுபயணிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒருநடைமேடையில் நான்கு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவைகளில் தண்ணீர் வராததால் காட்சிப்பொருளாக உள்ளன. ரயில் நிலையத்தில்முறையான குடிநீர் திட்டம் இல்லை.
ராமநாதபுரம் நகராட்சியில் இருந்து தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் ரயில் நிலைத்திற்கு தனியாககுடிநீர் திட்டம் செயல்படுத்தி நடை மேடைகளில் உள்ள குழாய்களில் குடிநீர் சப்ளைசெய்ய வேண்டும்.
ரயிலில் பயணிக்கும் பயணிகள் பெட்டிகளுக்கு அருகே குழாயில்மட்டுமே தண்ணீர் பிடிக்க முடியும்.
ரயில் 2 நிமிடத்திற்கு மேல் நிற்பதில்லை. முதல்நடைமேடையில் மட்டுமே தண்ணீர் வசதி இரு இடங்களில் செய்யப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலில் பயணம் செய்யும் பயணிகள் குடிநீருக்காக ரயில் நிலையங்களில் அலைவதுபரிதாபமாக உள்ளது.
ரயில்வே நிர்வாகம் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் குடிநீர்கிடைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.