/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டுப்படுத்தும் காவலர்களை கண்டு கொள்ளாத பயணியர்
/
கட்டுப்படுத்தும் காவலர்களை கண்டு கொள்ளாத பயணியர்
ADDED : மே 28, 2024 09:42 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடலின் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
புனித தலமான ராமேஸ்வரம் கோவில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் மீனவர்கள் கூட நீந்தி செல்ல அச்சப்படுவார்கள்.
காரணம் இங்கு எழும் அலைகள் கடற்கரையில் மண் அரிப்பை ஏற்படுத்தி மனிதர்களை கடலுக்குள் இழுத்துச் செல்லும் தன்மை உடையது. இதனால் தான் இந்த கடலுக்கு அரிச்சல்முனை என பெயர் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடலின் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளித்து விளையாடினர். இவர்களை வெளியேறும்படி போலீசார் வலியுறுத்தியும் பொருட்படுத்தவில்லை.
இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட சந்தீஷ் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.