/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை 'கவர்' இல்லாததால் நோயாளிகள் அவதி

ADDED : ஆக 30, 2024 10:06 PM
சிக்கல்: சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொட்டியபட்டி, பொட்டல்மச்சேரி, சிக்கல், கழநீர் மங்கலம், மதினா நகர், சிறைக்குளம், ஆண்டிச்சிகுளம், வல்லக்குளம் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் வருகின்றனர். இங்குள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தில் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
சிக்கல் அருகே டி. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேச மூர்த்தி கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வழங்கும் மருந்து சீட்டிற்கு மாத்திரைகள் வாங்குவதற்காக நோயாளிகள் சென்றால் சுகர், பிரஷர் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கான மாத்திரைகளை தனித்தனி கவர்களில் வழங்காமல் கைகளில் வழங்குகின்றனர். காலை, மதியம், இரவு எந்த மாத்திரை சாப்பிடுவது என்ற குளறுபடி ஏற்படுகிறது.
எனவே மாத்திரை வைக்க கூடிய பேப்பர் கவர்களை வழங்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.