/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூ வீலர்களால் மக்கள் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூ வீலர்களால் மக்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூ வீலர்களால் மக்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூ வீலர்களால் மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 24, 2024 03:43 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர், விருதுநகர்,திருச்செந்துார், திருநெல்வேலி, உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ் இயக்கப் படுகிறது. தினமும் 2000க்கு மேற்பட்டோர் பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் போதுமான இடவசதி இல்லாமல் மழை,வெயில் காலங்களில் கடைகள் முன்பு காத்திருக்கின்றனர்.
சிலர் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அப்போது பஸ்களில் ஏறமுடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சிலநேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே டூவீலர் நிறுத்துவதை தடுக்கவும், பொது மக்களுக்கு தேவையான வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.