/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபூர்வ கூந்தல் பனை மரம் காய் பிடிப்பால் மக்கள் வியப்பு
/
அபூர்வ கூந்தல் பனை மரம் காய் பிடிப்பால் மக்கள் வியப்பு
அபூர்வ கூந்தல் பனை மரம் காய் பிடிப்பால் மக்கள் வியப்பு
அபூர்வ கூந்தல் பனை மரம் காய் பிடிப்பால் மக்கள் வியப்பு
ADDED : மார் 08, 2025 05:36 AM

திருவாடானை : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள கூந்தல் பனை மரத்தில் 60 ஆண்டுகளுக்கு பின் காய்கள் பிடித்துள்ளதால் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் 70 அடி உயரத்தில் 60 வயதுஉடைய கூந்தல் பனை மரம் உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் பூக்கள்வைத்து தற்போது கொத்துக் கொத்தாக காய்கள் பிடித்துள்ளது. முதிர்ந்த காய்கள் கீழே விழுவதால் மருத்துவ குணத்துக்கு பயன்படுவதாக கூறி பொதுமக்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தாவரங்களின் சாம்ராஜ்யமாக பனை மரம் விளங்குகிறது. இதில் ஆண், பெண் பனை, தாலிப் பனை, கூந்தல் பனை என 34 வகையான பனை மரங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் தாலிப் பனையில் இருந்து ஓலைச் சுவடி எழுதி வந்தனர். பனையில் நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும்.
இதில் சிறுநீரக கோளாறு, அம்மை, உடலில் ஏற்படும் கொப்பளம் போன்றவைகளுக்குபக்க விளைவு இல்லாதமருந்தாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கூந்தல் பனை மரத்தில் 60 முதல் 70 ஆண்டுகளில் முதிர்ச்சி பெற்றதும் பூக்கள் பிடித்து கொத்துக் கொத்தாக காய்கள் பிடித்து ஆறு மாதங்களுக்கு பின் தானே அழிந்து விடும்.
இப்பூக்கள் காய்ந்து வெடித்துச் சிதறும் போது பல்வேறு வகையான ஒலி ஏற்படும். பழங்காலத்தில் இந்த மரத்தின் பனை ஓலையில் தாலி செய்து பெண்கள் அணிந்ததால் தாலிப் பனை எனவும், கூந்தல் போன்ற வடிவத்தில்உள்ளதால் கூந்தல் பனை என அழைக்கப்படுகிறது என்றனர்.
இந்த அதிசய கூந்தல் பனை மரத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.