/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் டூவீலர்களால் மக்கள் சிரமம்
/
ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் டூவீலர்களால் மக்கள் சிரமம்
ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் டூவீலர்களால் மக்கள் சிரமம்
ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் டூவீலர்களால் மக்கள் சிரமம்
ADDED : ஜூன் 29, 2024 05:57 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டோரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் டூவீலர்களால் நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. முதுகுளத்துார் தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
முதுகுளத்துார் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
போலீஸ், பேரூராட்சி சார்பில் ரோட்டோரத்தில் இருபுறங்களிலும் டூவீலர், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது வாரச்சந்தை நாட்களில் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் டூவீலர்களை ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் வாகனங்கள் வழிவிட்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலையோர வியாபாரிகள் கடைகளை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
எனவே ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

