/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியால் மக்கள் சிரமம்
/
கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியால் மக்கள் சிரமம்
கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியால் மக்கள் சிரமம்
கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியால் மக்கள் சிரமம்
ADDED : மே 09, 2024 05:13 AM

கமுதி: கமுதி அருகே பேரையூர் அய்யனார்புரம் கிராமத்தில் ரோடு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கமுதி அருகே பேரையூர் ஊராட்சி அய்யனார்புரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது. தற்போது கடந்த சில மாதத்திற்கு முன்பு புதிதாக தார் ரோடு அமைப்பதற்காக சிறிய ஜல்லிக்கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
ரோட்டோரத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. தற்போது வரை புதிய ரோடு அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கற்களால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.
டூவீலரில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள ரோடு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.