/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை மேலக்கொடுமலுார் மக்கள் முற்றுகை

ADDED : மே 07, 2024 05:15 AM

ராமநாதபுரம்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் கட்டநேந்தல் கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கீழக்கொடுமலுார் ஊராட்சி மேலக்கொடுமலுார் கட்டநேந்தல் கிராமத்தில் காவரி குடிநீர் வருவது இல்லை. ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்தனர்.
அந்த ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் இல்லாததால் அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.