/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயிலில் திருடியவரை பிடித்து கொடுத்த மக்கள்
/
கோயிலில் திருடியவரை பிடித்து கொடுத்த மக்கள்
ADDED : மார் 10, 2025 04:42 AM

கமுதி: கமுதி அருகே தீர்த்தான் அச்சங்குளம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோயில் விளக்குகளை, திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தீர்த்தான் அச்சங்குளம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோயில் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சித்தி விநாயகர் கோயிலில் அடையாளம் தெரியாத நபர் உண்டியல் மற்றும் விளக்குகளை திருடுவதாக சத்தம் கேட்டது. இதனைஅடுத்து குளித்து கொண்டிருந்த கிராமமக்கள் விரட்டி சென்று கோயிலில் திருடிய இளைஞரை பிடித்து அபிராமம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கன்னிராஜபுரம் ஜெயகணேஷ் 35, இருந்து குத்துவிளக்கு பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா என்பது குறித்து தனிப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.