/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிலையில் பயணியர் நிழற்குடை மக்கள் அச்சம்
/
ஆபத்தான நிலையில் பயணியர் நிழற்குடை மக்கள் அச்சம்
ADDED : மார் 03, 2025 06:31 AM

முதுகுளத்துார் முதுகுளத்துார் அருகே நல்லுாரில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் அபிராமம் ரோடு நல்லுாரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. பின் முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் தற்போது நிழற்குடையில் சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் மக்கள் அச்சப்படுகின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடன் காத்திருக்கின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நிழற்குடை அகற்றப்பட்டு புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.