/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரி ரசீது இன்றி மின்வசதி பெற முடியாமல் தேவிப்பட்டினம் வடக்கு தெரு மக்கள் அவதி

ADDED : ஏப் 30, 2024 12:05 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் வடக்கு தெருவில் சமஸ்தானம் வழங்கிய இடத்தில் 57 வீடுகளுக்கு சொத்து வரி ரசீது இன்றி மின் இணைப்பு பெறமுடியாமல்சிரமப்படுகின்றனர்.
தேவிப்பட்டினம் வடக்கு தெரு விஸ்வநாதன் தலைமையில் 30க்கு மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் ஊராட்சி நிர்வாகம் வரி ரசீது வழங்கக் கோரி மனு அளித்தனர்.
அதில், ராமநாதபுரம் சமஸ்தானம் சத்திரம் நிர்வாகத்திற்கு பாத்தியமான 5 ஏக்கரில் 57 பேருக்கு 2004 முதல் பத்திரம் பதிவு செய்து வீடு கட்டி வசிக்கிறோம். இந்த சொத்து தொடர்பாக சமஸ்தானம் சத்திரம் நிர்வாகம், தனிநபர் இடையே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் எங்களுக்கு சொத்துவரி ரசீது வழங்க ஊராட்சி நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். இதனால் மின் இணைப்பு பெற முடியாமல் சிரமப்படுகிறோம்.
தேவிப்பட்டினம் கிராமம் கழனிக்குடி ரோடு வடக்குத் தெருவில் வசிக்கும் 57 பேருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்காமலும், மின் இணைப்பு இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு பட்டா மாறுதல், சொத்துவரி, மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.