/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் ஆன்-லைன் முடக்கத்தால் மக்கள் அவதி
/
ஊராட்சிகளில் ஆன்-லைன் முடக்கத்தால் மக்கள் அவதி
ADDED : மே 04, 2024 04:54 AM
கடலாடி: -கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றியங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆன்-லைன் முடக்கத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ஊராட்சிகளில் அரசு சார்பில் நிதி பெறுவதற்கும் நிதியை செலுத்துவதற்கும் ஆன்-லைன் மூலமாக அப்டேட் செய்யப்படுகிறது.
கடந்த ஏப்., முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை ஆன்-லைன் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் முடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஊராட்சி செயலாளர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ஊராட்சியில் அடிப்படை தேவைகளில் ஒன்றாக விளங்கும் வரி இனங்களான தண்ணீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, வரைபட அனுமதி உள்ளிட்டவைகளை ஊராட்சியில் செலுத்துவதன் மூலமாக அந்தந்த ஊராட்சிக்குரிய வருவாயை பெருக்க இயலும்.
ஆன்-லைன் செயல்படாததால் ஏராளமானோர் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து சென்று தொடர் அலைக்கழிப்பை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.