/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முறிந்து விழுந்த 5 மின்கம்பம் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
/
முறிந்து விழுந்த 5 மின்கம்பம் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
முறிந்து விழுந்த 5 மின்கம்பம் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
முறிந்து விழுந்த 5 மின்கம்பம் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
ADDED : மே 11, 2024 10:21 PM

முதுகுளத்துார்:முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே குடியிருப்புகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி லாரியில் சிக்கியதால் 5க்கும் மேற்பட்ட மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.
முதுகுளத்துார்- -சாயல்குடி ரோட்டில் நீதிமன்றம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. நேற்று காலை 7:00 மணிக்கு முதுகுளத்துார்--கடலாடி ரோட்டில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
பணியின் போது இவ்வழியே வந்த லாரியில் உயர்அழுத்த மின்கம்பி சிக்கியதில் வீடுகளுக்கு முன்பு இருந்த 5 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது எதிர்பாராத விதமாக மக்கள் யாரும் வெளியில் வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வந்தனர். தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மின்சப்ளையை நிறுத்தினர். அப்பகுதி மக்கள் கூறியதாவது:
முதுகுளத்துார்--கடலாடி ரோட்டில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் பணி இங்கு நடக்கிறது. லாரியை அஜாக்கிரதையாக ஒட்டி வந்ததால் தெருவிற்கு செல்லும் மின்கம்பத்தின் உயர்அழுத்த லாரியில் சிக்கி 5க்கும் மேற்பட்ட மின்கம்பம் சாய்ந்து வீடுகளுக்கு மேல் விழுந்தது.
தற்போது வரை மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். மின்வாரியத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.