/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பகுதியில் தொடர் மின்தடை அனலில் தவிக்கும் மக்கள்
/
பரமக்குடி பகுதியில் தொடர் மின்தடை அனலில் தவிக்கும் மக்கள்
பரமக்குடி பகுதியில் தொடர் மின்தடை அனலில் தவிக்கும் மக்கள்
பரமக்குடி பகுதியில் தொடர் மின்தடை அனலில் தவிக்கும் மக்கள்
ADDED : மே 07, 2024 11:20 PM
பரமக்குடி : பரமக்குடி நகர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அனலில் தவிக்கின்றனர்.
பரமக்குடி நகர், காட்டு பரமக்குடி உப மின் நிலையத்திலிருந்து பரமக்குடி, எமனேஸ்வரம், சத்திரக்குடி, நயினார்கோவில், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் சப்ளை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது.
இச்சூழலில் வீடுகள், அலுவலகங்களில் மின்விசிறிகள் மற்றும் ஏ.சி., உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.தொடர்ந்து கிராமப்புறங்களில் மின் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இதன்படி சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர் மின் தடை ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி மின்தடை என்பது வாடிக்கையாக உள்ளது.
இதனால் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன. இதே போல் பகல் நேரம் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் மக்கள் புழுக்கத்தால் தவிக்கின்றனர். ஆகவே மின்வாரியத்தினர் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

