/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொன்னியேந்தல் ரோடு சேதம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
பொன்னியேந்தல் ரோடு சேதம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
பொன்னியேந்தல் ரோடு சேதம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
பொன்னியேந்தல் ரோடு சேதம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2024 05:48 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பொனியேந்தல் கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே அமைந்துள்ள பொன்னியேந்தல் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு ஆனந்துார் ரோடு, கூடலுார் பிரிவு சாலை வழியாக செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் கிராவல் சாலையாகவே உள்ளதால், லேசான மழை பெய்தாலே ரோடு சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பொது மக்களும் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். உடல்நலக்குறைவு, பிரசவம் உள்ளிட்ட அவசர நேரங்களுக்கு கூட, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களும், ரோட்டை காரணம் காட்டி வர மறுக்கின்றனர். எனவே கிராவல் சாலையாக உள்ள பொன்னியேந்தல் ரோட்டை சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.