/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
/
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 04, 2024 05:58 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் நகர் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில்,புதிதாக தேரிருவேலி தார்ரோட்டில் வேகத்தடைஅமைக்கப்படாததை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
நகரத்தலைவர் காதர் சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர், மாவட்ட துணைத்தலைவர் மீரான் முஹைதீன் மன்பஈ, மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் முன்னிலை வகித்தனர். அப்போது தேரிருவேலி ரோட்டில் இருந்து எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது டி.எஸ்.பி., சின்னக்கண்ணு தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், புதிய தார்ரோட்டில் வேகத்தடை, சாலையோரம் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.