/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீயனுாரில் மக்கள் சந்திப்பு முகாம்
/
தீயனுாரில் மக்கள் சந்திப்பு முகாம்
ADDED : ஜூலை 02, 2024 06:09 AM
பரமக்குடி : பரமக்குடி அருகே போகலுார் ஊராட்சி, தீயனுார் டி.கண்ணபுரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர், பொதுமக்கள் சந்திப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். போகலுார் பி.டி.ஓ.,க்கள் சிவசாமி, மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கலெக்டர் பேசியதாவது:
ரோடு, பஸ், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப் பணிகள், பட்டா மாறுதல், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உயர் கல்வி படிக்க ஏதுவாக அனைத்து திட்டங்களும் அரசால் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 வரை படித்த பின்னும் உயர்கல்விக்கு அனைத்து வகையிலும் அரசு உதவுகிறது.
தொடர்ந்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய துறைக்கு அனுப்பி ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அரசு வழங்கும் திட்டங்களை பெற்று பயன்பட வேண்டும் என்றார்.
இன்ஜினியர்கள் வசந்த், ஜெகன், தீயனுார் ஊராட்சி தலைவர் சாத்தாயி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.