/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியகண்மாய் கரை பாசன மடை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
பெரியகண்மாய் கரை பாசன மடை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பெரியகண்மாய் கரை பாசன மடை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பெரியகண்மாய் கரை பாசன மடை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2024 11:45 PM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரை வழியாக பாசன மடைகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட ரோட்டை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரிய கண்மாயில் 1 கி.மீ.,க்கு ஒரு மடை வீதம் 20 பாசன மடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாசன மடைகள் வழியாக பெரிய கண்மாய்க்கு கீழ் உள்ள 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அனைத்து பாசன மடைகளுக்கும் விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கண்மாய் கரை வழியாக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு கிராவல் ரோடு அமைக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பாசன மடைகளுக்கு எளிதாக சென்று வந்தனர்.
தற்போது பராமரிப்பின்றி ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாசன மடைகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.