ADDED : ஆக 08, 2026 04:30 PM
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
முன்னதாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைவர், செயலாளர், நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டமைப்பின் மாணவர் தலைவராக அருண்பாண்டியன், செயலாளராக அஸ்மி நுார் ஹலிசா, பொருளாளராக மதன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை டெக்னிகாஸ் இன்ஜினியர்ஸ் பி.லிட்., மின்துறையின் முதுநிலை சிறப்பு பொறியாளர் காளீஸ்வரன் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார் துணை முதல்வர் கணேஷ்குமார், மின்னியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மின்னியல் துறை சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விரிவுரையாளர் விஜயகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுநிலை விரிவுரையாளர் ஜாகிர் உசேன் செய்திருந்தார்.
