/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெயரளவில் குறைதீர் கூட்ட ஏற்பாட்டால் மாற்றுத்திறனாளிகள் வசதிகளின்றி அவதி

ADDED : ஆக 12, 2024 05:06 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சிறப்பு குறைதீர்க்கும் நாள், பரமக்குடி தாலுகா அலுவலக வராண்டாவில் சம்பிரதாய கூட்டமாக நடந்தது. அடிப்படை வசதியின்றி மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர்.
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வராண்டாவில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
காலை 10:00மணிக்கு பதிலாக காலை 11:15 மணிக்கு சப் கலெக்டர் அபிலாஷா கவுர் வருகை புரிந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து, துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
சப் கலெக்டர் சிலரிடம் மனுக்களைப் பெற்று சென்றுவிட்டார். 80 மனுக்கள் வரை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிக்கு நல திட்டங்கள் வழங்கப்படாமல் சம்பிரதாய கூட்டமாகவே நிறைவடைந்தது. மாற்றுத் திறனாளிகள் அமர்வதற்கு உரிய இருக்கை வசதி இன்றி தவித்தனர்.
தாசில்தார் சாந்தி, மாவட்ட செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சியாளர் ராமலட்சுமி, மாவட்ட திட்ட அலுவலர் அழகு மன்னன், மண்டல துணை தாசில்தார்கள் ஐயப்பன், வேங்கடகிருஷ்ணன் பங்கேற்றனர்.