/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்று கோலத்தில் பெருமாள்- தாயார் இன்று பல்லக்கில் உலா
/
மாற்று கோலத்தில் பெருமாள்- தாயார் இன்று பல்லக்கில் உலா
மாற்று கோலத்தில் பெருமாள்- தாயார் இன்று பல்லக்கில் உலா
மாற்று கோலத்தில் பெருமாள்- தாயார் இன்று பல்லக்கில் உலா
ADDED : மார் 28, 2024 10:50 PM

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி பெருமாள், தாயார் மாற்றுத் திருக்கோலத்தில் எழுந்தருளினர்.
பரமக்குடி பெருமாள் கோயிலில் மார்ச் 25 காலை 10:00 மணிக்கு பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊஞ்சலில் சேவை சாதித்தார்.
நேற்று காலை 4ம் நாளில் பெருமாளுக்கு தாயார் திருக்கோலமும், சவுந்தரவல்லி தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் அருள் பாலித்தார். இன்று(மார்ச் 29) காலை திருமஞ்சனம் நடக்கிறது.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.