/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவேந்திர குல வேளாளரை பி.சி., பட்டியலில் சேர்க்க கவர்னரிடம் மனு
/
தேவேந்திர குல வேளாளரை பி.சி., பட்டியலில் சேர்க்க கவர்னரிடம் மனு
தேவேந்திர குல வேளாளரை பி.சி., பட்டியலில் சேர்க்க கவர்னரிடம் மனு
தேவேந்திர குல வேளாளரை பி.சி., பட்டியலில் சேர்க்க கவர்னரிடம் மனு
ADDED : ஆக 13, 2024 12:15 AM

ராமநாதபுரம் : தேவேந்திர சேனா சமூக மற்றும் கலாசார அறக்கட்டளை சார்பில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.,) பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழக கவர்னர் ரவியிடம் மனு அளித்தனர்.
கவர்னர் ரவி ராமேஸ்வரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை ராமநாதபுரம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் கவர்னர் தங்கியிருந்தார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட தேவேந்திர சேனா சமூக மற்றும் கலாசார அறக்கட்டளை பிரதிநிதிகள் கவர்னர் ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தியிருந்தனர்.
அறக்கட்டளை மாவட்டத் தலைவர் பாபு, ஊடகப்பிரிவு தலைவர் சிவசாமி, செயலாளர் மணிமாறன், இளைஞர் அணி தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.