/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ரயில்வே அஞ்சலகம் முன் மறியல்; 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது

ADDED : ஆக 01, 2024 11:10 PM

பரமக்குடி : பரமக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்பு துவங்கிய மறியல் ஊர்வலம் ரயில்வே அஞ்சலகம் முன்பு முடிவடைந்தது. பட்ஜெட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்வாகனம் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் நகர் செயலாளர் ராஜா, மோதிலால், சி.பி.ஐ., நகர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ், கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது செய்யப்பட்டனர்.