/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அன்னையர் தினத்தில் மரக்கன்றுகள் நடவு
/
அன்னையர் தினத்தில் மரக்கன்றுகள் நடவு
ADDED : மே 16, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் பகுதியில் சேதுபதி நகர் ஊருணி கரையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
பட்டணம்காத்தான் பகுதியில் சேதுபதி நகர் ஊருணியை எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் தனி நபராக சுத்தம் செய்து அங்கு கரையில்மரங்களை நட செய்து அந்தப்பகுதியை பூங்கா போல் மாற்றியுள்ளார்.
அன்னையர் தினம் மற்றும் சர்வதேச தாவர ஆரோக்கிய தினத்தைமுன்னிட்டு சேதுபதி நகர் ஊருணி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் டிச.,3 மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்டத்தலைவர் ஜெயராணி, செயலாளர் ஆனந்தி, இயற்கை ஆர்வலர் சுபாஷ்சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலமரம், அரச மரங்கள் நடப்பட்டன.