/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கவுன்சிலர் வேண்டுகோள்

ADDED : ஜூலை 31, 2024 05:44 AM

பரமக்குடி, : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் தேவை என கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
எமனேஸ்வரம் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு எல்.கே.ஜி., துவங்கி 8ம் வகுப்பு வரை என 800 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு நகராட்சி சார்பில் புதிய வகுப்பறை கட்டி திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகராட்சி பள்ளி அருகில் வாறுகால் அசுத்தமாக இருந்தது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக் காட்டியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் வாறுகால் சீரமைக்கப்பட்டு அப்பகுதியில் மாணவர்களின் சைக்கிள் நிறுத்துமிடமாக மாற்றியுள்ளனர்.
மேலும் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலையில் உள்ளனர்.
நகராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் குபேந்திரன் கூறுகையில், எமனேஸ்வரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு வகுப்பறை கட்டடம் கட்டப்பட உள்ளது.
தொடர்ந்து பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.